உள்நாடு

மேலும் ஒரு தொகை Sputnik V இலங்கைக்கு

(UTV | கொழும்பு) –   ரஷ்யாவின் தயாரிப்பான மேலும் ஒரு தொகை ஸ்புட்னிக் – வி தடுப்பூசிகள் இன்று (19) அதிகாலை கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தன.

இதற்கமைய, இன்று 1,20,000 தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கப் பெற்றுள்ளன.

மொஸ்கோ நகரிலிருந்து டுபாய் வரை பயணிகள் விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து எமிரேட்ஸ் விமான சேவையின் ஈ.கே.-648 என்ற சரக்கு விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இவ்வாறு கொண்டு வரப்படும் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள், கண்டி பிரதேசத்தில் முதலாவது தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளவர்களுக்காக அனுப்பபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கணேமுல்ல சஞ்சீவ கொலை – துப்பாக்கிதாரியின் விளக்கமறியல் நீடிப்பு

editor

தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி வழக்கிலிருந்து துமிந்த திசாநாயக்க விடுவிப்பு

editor

சகல முச்சக்கரவண்டிகளிலும் கட்டண அளவீட்டு கருவியை பொருத்துவது கட்டாயம்