உள்நாடு

மேலும் இரு கொரோனா மரணங்கள் பதிவு

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்த மேலும் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

19 வயது மற்றும் 75 வயதுடையவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அத்துடன், குறித்த இருவரும் கொழும்பு – வாழைத்தோட்டம் மற்றும் கொழும்பு 2 ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக உயர்வடைந்துள்ளது.

கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையிலேயே குறித்த இருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

PHI அதிகாரிகள் – பிரதமர் இடையே இன்று பேச்சுவார்த்தை

மஹிந்த உள்ளிட்ட மூவருக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடை நீக்கம்

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தாடி வைத்தமைக்காக பரீட்சை அறையில் இருந்து மாணவர் வெளியேற்றம்