உள்நாடு

பொத்துவிலில் மேலாடை இன்றி நிர்வாணமாக வீதியில் நடந்து சென்ற வெளிநாட்டுப் பெண் கைது

அம்பாறை, பொத்துவில் அறுகம் குடா சுற்றுலா தளத்தில் மேலாடை இன்றி நிர்வாணமாக வீதியில் நடந்து சென்ற வெளிநாட்டுப் பெண் ஒருவர் பொத்துவில் பொலிஸ் மகளிர் பணியகத்தினால் நேற்று திங்கட்கிழமை (14) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த வெளிநாட்டுப் பெண் அறுகம் குடா சுற்றுலா தளத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றிலிருந்து மற்றுமொரு ஹோட்டலுக்கு மேலாடை இன்றி நிர்வாணமாக நடந்து சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட வெளிநாட்டுப் பெண் இன்று செவ்வாய்க்கிழமை (15) பொத்துவில் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பாடசாலை சீருடை வவுசர்களின் கால எல்லை நீடிப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து பதவிகளிலிருந்தும் இராஜிநாமா செய்தார் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்

editor

தொழிலுக்காக வௌிநாடு செல்வோருக்கு தடுப்பூசியேற்றல் நாளை