உள்நாடு

“மெயின் ஷிஃப் 5” என்ற அதிசொகுசு கப்பலின் இலங்கை வருகை

(UTV | கொழும்பு) –     “மெயின் ஷிஃப் 5” என்ற அதிசொகுசு கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

 

அதன்படி, இக்கப்பல் இன்று காலை 6.30 மணியளவில் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை வந்தடைந்துள்ளது. கப்பலின் அளவு காரணமாக பயணிகள் முனையத்திற்கு வரமுடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

2016 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கப்பலில் 295 மீற்றர் நீளம் உள்ளது மற்றும் 2500 பயணிகள் தங்க முடியும். இதேவேளை இன்று இரவு ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு புறப்படும் நாளை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து மீண்டும் புறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் “மெயின் ஷிஃப் 5” என்ற சொகுசு பயணிகள் கப்பல் இலங்கைக்கு வருவது இதுவே முதல் முறை என குறிப்பிடப்படுகின்றது.

 

Related posts

அவசர திருத்தப் பணிகள் காரணமாக நீர்வெட்டு

தென்னந்தோப்பு உரிமையாளர்களுக்கு உர மானியம் – அமைச்சர் சமந்த வித்யாரத்ன

editor

பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்து – பலர் காயம்

editor