உள்நாடு

மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து – பலர் காயம்

காலி, இமதுவ, அங்குலுகஹா சந்தியில் மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று (26) காலை 8.30 மணியளவில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு தனியார் பயணிகள் பேருந்துகளும், அலுவலக ஊழியர்களை ஏற்றிச் செல்லும் பேருந்தும் ஒன்றுமே விபத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நிறுத்தப்பட்டிருந்த பேருந்தொன்றில் பயணித்துக்கொண்டிருந்த பேருந்து மோதியதுடன், அதன் பின்னால் வந்த மற்றொரு பேருந்து அதன் மீது மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் 29 பேர் காயமடைந்துள்ளதுடன், அவர்களில் ​23 பேர் இமதுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 06 பேர் கராபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

அனைத்து பிள்ளைகளுக்கும் மிக உயர்ந்த தரத்திலான கல்வியை வழங்குவதே எமது நோக்கம் – பிரதமர் ஹரிணி

editor

வீட்டு மாடியிலிருந்து கீழே தவறி விழுந்த நபர் உயிரிழப்பு

editor

அரச ஊழியர்களுக்கு 05 வருட விடுமுறை