உள்நாடு

மூன்றாவது நாளாக தொடரும் தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு!

தபால் தொழிற்சங்க ஊழியர்கள் முன்னெடுத்து வரும் பணிப்புறக்கணிப்பு மூன்றாவது நாளாக இன்றும் (20) தொடரும் என தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

அமைச்சருடன் முறையான கலந்துரையாடலை கோரி இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக அதன் தலைவர் ஜி.ஜி.சி. நிரோஷன தெரிவித்துள்ளார்.

அதேநேரம், வரவு நேர பதிவுக்காக கைரேகை இயந்திரம் நிராகரிக்கப்பட்டதாக வௌியான குற்றச்சாட்டுகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் கருத்து வௌியிட்ட பிரதி தபால்மா அதிபர் சமீஷா டி சில்வா, கைரேகை இயந்திரத்தை செயல்படுத்துவதே தொழிற்சங்கத்தினரின் பணிப்புறக்கணிப்புக்கான காரணம் என தெரிவித்தார்.

Related posts

மோட்டார் வாகனங்களை இறக்குமதி செய்வதில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்வு!

தேர்தல் சட்டங்களை மீறிய 14 வேட்பாளர்களும், 46 ஆதரவாளர்களும் கைது!

editor

ஜனாதிபதி – தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு இன்று