உள்நாடு

மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது

(UTV | கொழும்பு) –  சம்பள உயர்வு உள்ளிட்ட 7 கோரிக்கைகளை முன்னிறுத்தி 18 சுகாதார சேவைகள் தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்துள்ள தொடர் பணிப்புறக்கணிப்பு 3 ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது.

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுடன் சுகாதார தொழிற்சங்கங்கள் நேற்று நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் நிறைவடைந்தநிலையில், தமது பணிப்புறக்கணிப்பினை தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

தமது கோரிக்கைகளுக்கான உரிய தீர்வு கிடைக்கும் வரையில் தொழிற்சங்க போராட்டத்தினை கைவிடப்போவதில்லையென சுகாதார சேவையாளர்களின் தேசிய சம்மேளனம் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மியன்மார் இராணுவ ஆட்சியுடன் இலங்கை – வலுக்கும் சர்வதேச எதிர்ப்புகள் [VIDEO]

அர்ச்சுனா எம்.பி தாக்கியதாக கூறி இருவர் வைத்தியசாலையில் அனுமதிப்பு

editor

இன்று 26க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் இரத்து