உள்நாடு

மூன்றாவது அலையை தடுக்க பொறுப்புடன் செயல்படவும்

(UTV | கொழும்பு) – கொவிட் தொற்றின் (கொரோனா) மூன்றாவது அலையை தடுக்க பொறுப்புடன் செயல்படுமாறு இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.

மூன்றாவது அலை கொரோனா நாட்டில் வராமல் தடுக்க அனைத்து மக்களும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

அந்த வகையில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறும்போது முகக்கவசம் அணியுமாறும் சுகாதார வழிமுறைகளை கடைபிடிக்குமாறும் அவர கேட்டுக்கொண்டார்.

இலங்கையில் நேற்று பதிவான 253 கொரோனா தொற்றாளர்களில் 48 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஒழுக்க ரீதியாகவும் பண்பட்ட வளமானதொரு சமூகத்திலேயே அனைவருக்கும் நீதி சாத்தியமானது

கொழும்பில் முச்சக்கரவண்டியினுள் இருந்து சடலம் ஒன்று மீட்பு

பேருந்தில் இருந்து மாணவர்களை பலவந்தமாக இறக்கிய நடத்துனரின் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம் | வீடியோ

editor