உள்நாடுபிராந்தியம்

மூதூர் புனித அந்தோனியார் மகா வித்தியாலயத்தில் வாணி விழாவும் பரிசளிப்பு நிகழ்வும்

மூதூர் பிரதேசத்திலுள்ள தி/மூ/புனித அந்தோனியார் மகா வித்தியாலயத்தில் வருடாந்த வாணி விழாவும் பரிசளிப்பு நிகழ்வும் இன்று (30.09.2025) சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வானது அருட்தந்தை அகஸ்ரின் கொன்பியூசியஸ் அதிபர் தலைமையில் மிக சிறப்பாக பாடசாலை விழா மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு ஓய்வுநிலை அதிபர் திரு. இரா. இரத்தின சிங்கம் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

சிறப்பு விருந்தினர்களாக
சிவசிறி வேலுப்பிள்ளை குருக்கள் மற்றும் திருமதி. வசந்தி நிர்மலன் இந்து ஆலோசக. ஆசிரியர்ஆகியோர் கலந்து கொண்டு விழாவை மேலும் சிறப்பித்தனர்.

விழாவின் ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் மரியாதையுடன் வரவேற்கப்பட்டதுடன், பள்ளி மாணவர்களின் பாரம்பரிய வரவேற்பு நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

தொடர்ந்து மாணவர்களால் கலாச்சார நிகழ்ச்சிகள், பாடல்கள், நடனங்கள், உரைகள் என பல்வேறு நிகழ்வுகள் ஆற்றப்பட்டன.

இதனைத் தொடர்ந்து பாடசாலையில் இடம்பெற்ற போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு இடம்பெற்றது.

-முஹம்மது ஜிப்ரான்

Related posts

ஜின்னா புலமைப் பரிசிலுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றது

மியன்மாரிலிருந்து இலங்கைக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை

கொழும்பில் 266 பேருக்கு கொவிட் உறுதி