உள்நாடுபிராந்தியம்

மூதூர் இமாம் ஷாபி வித்தியாலயம் தேசிய மட்ட இஸ்லாமிய கலாச்சார போட்டியில் வரலாற்று சாதனை

மூதூர் இமாம் ஷாபி வித்தியாலயம் தேசிய மட்ட இஸ்லாமிய கலாச்சார போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்று தமது பாடசாலையின் வரலாற்றில் புதிய சாதனையைப் படைத்துள்ளது.

இந்தச் சிறப்பை முன்னிட்டு, மாணவர்களை கௌரவிக்கும் வாகன வீதி பேரணி ஒன்று இன்று (03) திங்கட்கிழமை பாடசாலை வளாகத்திலிருந்து ஆரம்பமாகி, மூதூர் வலயக் கல்வி அலுவலகத்துக்குச் சென்றடைந்தது.

அங்கு வலயக் கல்வி பணிப்பாளர் சாதனை படைத்த மாணவர்களை வாழ்த்தி மாணவர்களுக்கு நினைவுச் சின்னங்களை வழங்கி கௌரவித்தார்.

பின்னர், மூதூர் பிரதேசம் முழுவது பேரணி மாணவர்களை அழைத்து வந்து மீண்டும் பாடசாலை வளாகத்தை வந்தடைந்தனர்

இந்த மகத்தான வெற்றிக்காக, பாடசாலை அதிபர் திருமதி எஸ்.யூ. சஹீமா நஜாத், பிரதியதிபர்கள், மேலும் மாணவர்களை வழிநடத்திய ஆசிரியர்கள் ஏ.ஜே.எம். சப்றாஸ் (நத்வி) மற்றும் பஹ்மியா நப்ரி ஆகியோரின் அர்ப்பணிப்பான பங்களிப்பு செய்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த நிகழ்வில் பாடசாலையிலன் பழைய மாணவர்கள் ,பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் ,மற்றும் பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

-முஹம்மது ஜிப்ரான்

Related posts

திருட்டுக் குற்றச்சாட்டில் முன்னாள் சப் இன்ஸ்பெக்டர் கைது!

editor

72 தொழிற்சங்கங்கள் பணி பகிஷ்கரிப்பு!

தேசியப்பட்டில் ஆசனத்தை சுமந்திரனுக்கு வழங்கலாம் – சித்தார்த்தன் ஆலோசனை

editor