உள்நாடு

முஸ்லிம் மீடியா போரத்தின் அனர்த்த நிவாரண நிதியத்திற்கு நிதியுதவி

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் அனர்த்த நிவாரண நிதியத்திற்கு வெள்ளவத்தை ஜும்ஆப் பள்ளிவாசலின் தலைவரான பிரபல தொழிலதிபர் பீர்கான் றிஸ்வி, தனது சொந்த நிதியிலிருந்து நிதியுதவி வழங்கியுள்ளார்.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். றிஸ்வி முப்தி முன்னிலையில் கடந்த வியாழக்கிழமை (18) இந்த நிதி அன்பளிப்புச் செய்யப்பட்டது.

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தினால் இந்த நிதி பகிர்ந்தளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தொழிற்சங்க பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்தித்தனர்

வெலிகமயில் கொள்கலன் வெடித்ததில் மூவர் காயம்

சத்திர சிகிச்சைகள் மற்றும் கிளினிக் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை