வடமாகாணத்தில் நிலவும் தற்போதைய சூழலை முன்னிட்டு, முஸ்லிம் பாடசாலைகளுக்கு உடனடி அவசர விடுமுறை வழங்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் முத்து முஹம்மட் அவர்கள் வடமாகாண ஆளுனருக்கு இன்று அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
தனது கடிதத்தில் அவர்,
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு,போக்குவரத்து சிக்கல்கள் மேலும் சில பகுதிகளில் உருவாகியுள்ள அமைதியற்ற நிலை என பல காரணங்களை முன்வைத்து, நிலைமை சீராகும் வரை குறித்த பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
அவர் மேலும், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆளுனர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
