உள்நாடு

முழந்தாளிடச் செய்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

(UTV | கொழும்பு) –  ஏறாவூர் பகுதியில் வைத்து இராணுவத்தினரால் பொதுமக்கள் சிலரை முழந்தாளிடச் செய்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் அறிவுரைக்கமைய இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர் பகுதியில் பயணத் தடையை மீறியமைக்காக பொதுமக்கள் சிலரை, இராணுவத்தினர் நேற்று முழந்தாளிட வைத்தமை தொடர்பான ஒளிப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தன.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ அதிகாரிகள் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டு வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க இராணுவ தளபதி உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மீண்டும் டொலர் தட்டுப்பாடு : தேங்கி நிற்கும் எரிபொருள் கப்பல்கள்

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு [UPDATE]

இலங்கை வரும் சீன தடுப்பூசி சீனர்களுக்கே