வகைப்படுத்தப்படாத

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பம்

(UDHAYAM, COLOMBO) – முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் நேற்று ஆரம்பமாகியது.

வடமாகாண சபையின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் செம்மணி மயான பூமியில் மலர்வணக்கம் செலுத்தப்பட்டு, நினைவுச் சுடர் ஏற்பட்டது.

இதன்போது வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் ஆகியோருடன், வடமாகாண சபையின் எதிர்கட்சித் தலைவர் தவராசாவும் கலந்து கொண்டிருந்தார்.

எதிர்வரும் 18ம் திகதி வரையில் நினைவேந்தல் வாரம் அனுஸ்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

எதிர்ப்பு பேரணியில் பங்குகொண்ட 4 பல்கலைக்கழக மாணவர்கள் கைது

ஹப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற காணொளி வெளியானது

கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு