சூடான செய்திகள் 1

முல்லைத்தீவில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் பலி: நால்வர் படுகாயம்

(UTV|COLOMBO)-முல்லைத்தீவு – நெடுங்கேணி – முல்லியவலை வீதியில் இராணுவ வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இரண்டு அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.

இன்று பிற்பகல் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்தில் உயிரிழந்துள்ளவர்கள் இராணுவ மேஜர் ஒருவரும், இராணுவ அதிகாரியொருவரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்தில் காயமடைந்த மேலும் நான்கு பேர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

 

 

Related posts

கலஹா சம்பவம்-பிரதேசவாசிகள் மீது கண்ணீர்புகை தாக்குதல்

ஒல்கொட் மாவத்தையில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் தீ

பொகவந்தலாவையில் லயன் குடியிருப்பில் தீ விபத்து