உள்நாடு

முறையற்ற சொத்துக் குவிப்பு – CID இல் முன்னிலையாகுமாறு யோஷிதவுக்கு அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களில் ஒருவரான யோஷித ராஜபக்சவை எதிர்வரும் ஜனவரி 03 ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக சொத்து சேர்த்தமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களம் அவருக்கு அறிவித்துள்ள நிலையில், அவர் எதிர்வரும் 03ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வரவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சியிடம் குற்றப் புலனாய்வுப் திணைக்களம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.

நேற்றையதினம் (27) அவரிடம் சுமார் 4 மணித்தியால விசாரணை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெவில் வன்னியாராச்சியின் பெயரில் உள்ளதாக தெரிவிக்கப்படும் பெருந்தொகையான சொத்துக்களை அவர் எவ்வாறு பெற்றுக்கொண்டார் என்பது தொடர்பிலேயே இதன்போது விசாரணை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

Related posts

பாடசாலை வேனில் வைத்து மாணவி பாலியல் துஷ்பிரயோகம் – சாரதிக்கு 25 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

editor

இலங்கை கடுமையான காலநிலை அனர்த்தங்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் – சஜித் பிரேமதாச

editor

உலமா சபையின் 2025 ஆண்டு நிறைவேற்று குழுத் தெரிவு – முழு விபரம்

editor