பொது நிதியை பயன்படுத்தி 1.66 பில்லியன் ரூபா செலவில் தனியார் வெளிநாட்டு பயணத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு நாளை (28) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
இந்த வழக்கின் விசாரணை ஒரு மாதத்துக்குள் நிறைவடைந்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படும் என்று மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நவம்பர் 19 அன்று கோட்டை நீதிவான் நீதிமன்றத்துக்குத் தெரிவித்தார்.
இந்த வழக்கு விசாரணை தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை ஏற்கனவே இங்கிலாந்தில் பலரிடம் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளது.
