அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் கைது குறித்து கவலை தெரிவித்த இந்திய பாராளுமன்ற உறுப்பினர் சசி தரூர்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டதற்கு இந்திய பாராளுமன்ற உறுப்பினர் சசி தரூர் கவலை தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவின் கைது தொடர்பில் சசி தரூர் தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

இப்பதிவில் பதிவிட்டுள்ளதாவது ,

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறிய குற்றச்சாட்டுகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது .

பழிவாங்கும் அரசியலைக் கைவிட்டு, பல தசாப்தங்களாக தேசத்திற்கு சேவை செய்த முன்னாள் ஜனாதிபதியை உரிய மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இருப்பினும், இது இலங்கையின் உள் விவகாரம் என்றும், அதை தாம் முழுமையாக மதிக்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

Related posts

அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடல் இல்லை

அரசியலமைப்பு சபை குறித்த விவாதம் எதிர்வரும் வியாழனன்று

தலைமை பயிற்சியாளராக சாமர சில்வா நியமனம்

editor