இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலை சீராக உள்ளது என கொழும்பு தேசிய வைத்தியசாலை உறுதிப்படுத்தியுள்ளது.
இது குறித்து கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர், வைத்தியர் பிரதீப் விஜேசிங்க, அவரது வயது காரணமாக இரத்த அழுத்தம் சற்று அதிகமாக உள்ளது, எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே அவரை தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றினோம்.
அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை’ எனத் தெரிவித்தார்.