உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் முன்னாள் பாதுகாப்பு பிரதானிக்கு எதிரான வழக்கு திகதியிடப்பட்டது

28 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்களை சட்டவிரோதமாக ஈட்டியதாக சந்தேகத்தின் பேரில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முன்னாள் பாதுகாப்பு பிரதானி நெவில் வன்னியாராச்சிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டை ஜூன் 9 ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று (16) உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு அழைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், சந்தேகநபரான நெவில் வன்னியாராச்சியும் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.

இதன்போது நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைத்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு, இம்முறைப்பாடு தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அதன் முன்னேற்றத்தை அறிவிப்பதற்காக திகதி ஒன்றை வழங்குமாறும் கோரிக்கை விடுத்தது.

அதனையடுத்து முறைப்பாட்டை ஜூன் மாதம் 9 ஆம் திகதி அழைப்பதற்கு உத்தரவிட்ட நீதிமன்றம், அன்றைய தினம் இவ்விசாரணைகளின் முன்னேற்றத்தை அறிவிக்குமாறும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டது.

Related posts

முழுமையாக முடக்கப்பட்ட பிரதேசங்களுக்கு நிதியுதவி

இன்றும் மின்வெட்டு அமுலுக்கு

பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் நிகழ்நிலை காப்பு சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில்!