இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை, இ.தொ.கா பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், மற்றும் இ.தொ.கா நிதிச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மருதப்பாண்டி ராமேஸ்வரன் ஆகியோர் இன்று (28) தங்காலை, கால்டன் இல்லத்தில் சந்தித்தனர்.
இந்த சந்திப்பின் போது, அவர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சுகநிலை குறித்தும் நலம் விசாரித்து உரையாடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.