அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

முன்னாள் ஜனாதிபதிகளின் ஓய்வூதியங்கள் நீக்கப்படாது – சட்டமா அதிபர் தெரிவிப்பு

ஜனாதிபதி உரித்துரிமைகள் தொடர்பாக முன்மொழியப்பட்ட பிரேரணையில், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட ஓய்வூதிய உரிமைகளை நீக்க முயலவில்லை என்றும் மாறாக 1986 ஆம் ஆண்டு 04 ஆம் இலக்க ஜனாதிபதி உரித்துரிமைகள் சட்டத்தின் கீழ், முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது விதவைகளுக்கு வழங்கப்படும் மேலதிக சலுகைகளைக் குறைப்பதே சட்டமூலத்தின் நோக்கம் என்றும் சட்ட மாஅதிபர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

முன்மொழியப்பட்ட ஜனாதிபதி உரித்துரிமைகள் (ரத்துசெய்தல்) பிரேரணையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஏழு மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சட்ட மாஅதிபர் சார்பாக ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன இதனை குறிப்பிட்டார்.

பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன, நீதியரசர்கள் அச்சலா வெங்கப்புலி மற்றும் சம்பத் அபயகோன் ஆகியோர் கொண்ட அமர்வில், இந்த மனுக்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

Related posts

ஜனவாி 23 முதல் விமான நிலையங்கள் வழமைக்கு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி அநுர வௌியிட்ட விசேட அறிவிப்பு

editor

எம்மால் செய்ய இயலுமானதை செய்வதே எமக்கு தேவையானது – பிரதமர் ஹரிணி

editor