அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

முன்னாள் எம்.பி சுமந்திரனுக்கு வழங்கப்பட்ட இரண்டு மெய்ப்பாதுகாவலர்கள் – வெடித்தது புதிய சர்ச்சை

இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரனுக்கு இரண்டு மெய் பாதுகாவலர்கள் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைத்த பின்னர் செலவினங்களை குறைக்க வேண்டும் என்ற அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதிகள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் உட்பட பல பாராளுமன்ற உறுப்பினர்கள் மெய்பாதுகாவலர்களின் பாதுகாப்பை பெற்றுக் கொள்ளவில்லை.

இருப்பினும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு இரண்டு மெய் பாதுகாவலர்கள் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

-பு.கஜிந்தன்

Related posts

மாகந்துர மதூஷ் உள்ளிட்ட குழுவினரை இராஜதந்திர ரீதியில் நாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை

திருகோணமலையில் மணல் அகழ்வு அனுமதிப் பத்திரங்கள் இடைநிறுத்தம்

சுவிட்ஸர்லாந்து விபத்தில் இலங்கை இளைஞர் உயிரிழப்பு