அரசியல்உள்நாடு

முன்னாள் எம்.பி சஜின் வாஸ் குணவர்தனவுக்கு எதிரான பிடியாணையை மீளப்பெற நீதிமன்றம் உத்தரவு!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவுக்கு எதிராக 3.69 மில்லியன் ரூபா வருமான வரி செலுத்துவதைத் தவிர்த்துள்ளதாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராகத் தவறியதற்காக கடந்த 23ஆம் திகதி கைது செய்யப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப் பெற கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (25) உத்தரவிட்டுள்ளது.

தனது சட்டத்தரணி மூலம் இன்று கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனாவல முன் ஆஜரான சஜின் வாஸ் குணவர்தனவின் பிடியாணையை மீறப் பெற உத்தரவிட்ட நீதவான், 100,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 2.5 மில்லியன் ரூபா பெறுமதியான நான்கு பிணைகளிலும் விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.

Related posts

சுற்றுலா துறையில் ஏற்படப்போகும் புதிய மற்றம்!

இதுவரை 895 கடற்படையினர் குணமடைந்தனர்

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையமும் செயலிழந்தது

editor