அரசியல்உள்நாடு

முன்னாள் எம்.பியின் டிபெண்டர் விபத்தில் சிக்கியது

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தவிற்கு சொந்தமானது என கூறப்படும் டிபெண்டர் வாகனம் நேற்று (25) விபத்துக்குள்ளாகியுள்ளது.

வாரியபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாதெனிய அனுராதபுரம் வீதியில் தங்கஹமுல சந்தியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் பின்னர் பிரதேசவாசிகளுக்கும், டிபெண்டர் வாகனத்தில் வந்தவர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதுடன், இரு பிரிவினருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் வாகனத்தில் பல்வேறு ஆயுதங்கள் இருந்ததாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Related posts

21 மாவட்டங்களில் நாளை தளர்த்தபடவுள்ள ஊரடங்கு

குருந்தூர் மலை பொங்கல் நிகழ்வை குழப்ப முயற்சி – க.சிவநேசன் தெரிவித்த கருத்து!

கொரோனா: குணமடைந்தோர் எண்ணிக்கை 18ஆக உயர்வு