அரசியல்உள்நாடு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் திங்கட்கிழமை (22) வரை விளக்கமறியலில் வைக்க, கொழும்பு நீதிமன்றம் இன்று (19) உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரிக்கும் கொழும்பு பிரதான நீதிமன்ற நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று விடுமுறையில் உள்ளதால், வழக்கு அடுத்த திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஊழல் குற்றச்சாட்டில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் சஷீந்திர ராஜபக்ஷவின் பிணை மனு மீதான உத்தரவும் அன்றைய தினம் அறிவிக்கப்பட உள்ளது.

Related posts

ஒரு நாள் சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டையை வழங்கும் சேவை

தாமரைக் கோபுரத்திற்கு சேதம்விளைவித்த நபர்கள் கைது!

ஈஸ்டர் தாக்குதலும் அரசின் காய் நகர்த்தல்களும் [VIDEO]