அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவிற்கு பிடியாணை!

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, வழக்கு விசாரணைக்கு ஆஜராகத் தவறியதால், அவரைக் கைது செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணையைப் பிறப்பித்துள்ளது.

இந்த வழக்கு இன்று (21) கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க முன்னிலையில் அழைக்கப்பட்டது.

அப்போது பிரதிவாதி நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால் பிடியாணையைப் பிறப்பிக்கப்பட்டது.

பிரதிவாதி டயானா கமகேவின் பிணையாளர்களுக்கும் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது

Related posts

மேலதிக உதவிகளைப் பெற IMF மற்றும் உலக வங்கியுடன் பேச்சு

சீன – இலங்கை நட்புறவு தேசிய சிறுநீரக விசேட வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகளை ஜனாதிபதி பார்வையிட்டார்

கொழும்பில் மாத்திரம் 5000ற்கும் அதிகமான கொவிட் தொற்றாளர்கள்