அரசியல்உள்நாடு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் பிணையில் விடுதலை

மணல் அனுமதிப் பத்திரம் வழங்குவதற்காக தொழிலதிபர் ஒருவரிடமிருந்து 1.5 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற உதவியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

கடந்த மார்ச் 25 அன்று இலஞ்ச ஊழல் புலனாய்வு ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்ட வியாழேந்திரன், முதலில் ஏப்ரல் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு, பின்னர் அவரது விளக்கமறியல் காலம் இன்று (08) வரை நீடிக்கப்பட்டது.

இதே வழக்கில், கடந்த ஆண்டு வியாழேந்திரனின் தனிப்பட்ட செயலாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

தற்போது, விசாரணைகள் தொடரும் நிலையில், முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Related posts

வற் வரியில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ள பொருட்கள்!

எரிவாயு விலை திருத்தம் தொடர்பாக இன்றும் கலந்துரையாடல்

உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பு