அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா பிணையில் விடுதலை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவரை பிணையில் விடுதலை செய்ய கம்பஹா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேர்வின் சில்வா சமர்ப்பித்த பிணை மனு இன்று (03) கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி டபிள்யூ. கே. டி. விஜயரத்ன முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டபோதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன்போது, ​​மேர்வின் சில்வா, ஜயந்த கப்ரால் மற்றும் நவீன் வீரகோன் ஆகிய மூன்று பிரதிவாதிகளுக்கும் பிணை வழங்கப்பட்டது.

குறித்த மூவரும் தலா 200,000 ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான ஐந்து சரீரப் பிணைகளிலும் விடுவிக்கப்பட்டுள்ளனர், மேலும் அவர்களுக்கு வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

சாட்சிகள் மீது அழுத்தம் பிரயோகிப்பதை தவிர்க்குமாறு பிரதிவாதிகளுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்ததோடு, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு லங்கா ஐ ஓ சி நிறுவனத்தினால் (Dialysis machine) அன்பளிப்பு!

editor

‘இலங்கை கால்பந்து சம்மேளனம்’ கோபா குழு முன்னிலையில் அழைப்பு

கொரோனா வைரஸ் – மேலும்  23 பேர் பூரண குணமடைந்தனர்