அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளின் விசேட கலந்துரையாடல்

எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளின் கூட்டணியில் நாளை (14) விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கில் இந்தக் கலந்துரையாடல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி அரசியல் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

கடந்த வாரம், முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸின் இல்லத்தில் இந்த விவகாரம் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக நாளையும் இந்த விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இருப்பினும், அரசாங்கத்துக்கு நேரடியாக சவால் விடும் நோக்கத்துடன் கூட்டணியை உருவாக்க இந்த கலந்துரையாடல் பயன்படுத்தப்படாது என்றும், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை உருவாக்குவது மட்டுமே இதன் நோக்கம் என்றும் எதிர்க்கட்சி அரசியல் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

Related posts

Astra Zeneca தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்க ஜப்பான் இணக்கம்

ஆர்ப்பாட்டம் காரணமாக ஒல்கோட் மாவத்தையில் கடும் வாகன நெரிசல்

உத்தர தேவி தடம் புரண்டது