அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் கெஹெலியவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எதிரான வழக்கு மீதான விசாரணை – திகதி குறிப்பு!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகனுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஒக்டோபர் 15 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் மொஹமட் மிஹால் முன்னிலையில் இன்று புதன்கிழமை (01) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

97 மில்லியன் ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள சொத்துக்களை சட்டவிரோதமாக வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகனுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொரோனா நோயாளிகள் 6 பேர் பூரண குணம்

இன்று தடுப்பூசி செலுத்தப்படும் மத்திய நிலையங்கள்

சம்மாந்துறையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாநாடு!

editor