அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உட்பட 12 பேருக்கு நீதிமன்றம் அழைப்பு

தரமற்ற தடுப்பூசிகளை கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உட்பட 12 பிரதிவாதிகளை எதிர்வரும் 11 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றம் இன்று (07) அழைப்பாணை பிறப்பித்துள்ளது.

பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றப்பத்திரிகைகளை கையளிக்க நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இவ்வாறு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி, 13 குற்றப்பத்திரிகைகளின் கீழ் பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதிகள் மஹேன் வீரமன், அமாலி ரணவீர மற்றும் பிரதீப் அபேரத்ன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வு முன் விசாரிக்கப்பட உள்ளது.

Related posts

தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையில் உள்ள கூண்டிலிருந்து திருடப்பட்டுள்ள கிளி

editor

தேவை ஏற்பட்டால்  ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படும் – அமைச்சர் டிரான் அலஸ்

editor

சினோபார்ம் தடுப்பூசியின் தாமதத்திற்கான காரணம்