அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவை கைது செய்வது தொடர்பில் சட்டமா அதிபரின் அறிவிப்பு!

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவை கைது செய்ய முடிவு எடுக்கப்படுமானால், அது தொடர்பில் மனுவொன்றின் ஊடாக நீதிமன்றத்திற்கு அறிவிப்பதாக சட்டமா அதிபர் இன்று (24) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

தாம் கைது செய்யப்படுவதை தடுக்கும் உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி உதய கம்மன்பில தாக்கல் செய்துள்ள ரிட் மனு இன்றைய தினம் விசாரணைக்கு அழைக்கப்பட்டது.

இதன்போதே குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளார்.

Related posts

அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணியாமை

ஏப்ரல் 10 நோன்பு பெருநாள் தினத்தை விசேட விடுமுறையாக பிரகடனப்படுத்துமாறு அரசாங்க பொது சேவைகள் சங்கம் கோரிக்கை…!!!

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் இடியுடன் கூடிய மழை!

editor