அரசியல்உள்நாடு

முதலில் போதைப்பொருளை எரித்தது நான் தான் – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் நான்கு போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்குவதற்கு கையெழுத்திட்டுள்ளேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவிக்கையில்,

இந்த அரசாங்கத்தில் நல்ல மற்றும் தீய விடயங்கள் ஆகிய இரண்டும் உள்ளன.

உதாரணமாக போதைப்பொருளை ஒழிக்கும் நடவடிக்கையை எடுத்துக்கொண்டால், முதலில் போதைப்பொருளை எரித்தது நான் தான்.

வேறு எந்த ஜனாதிபதியும் போதைப்பொருளை எரிக்கவில்லை.

நான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் நான்கு போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்குவதற்கு கையெழுத்திட்டுள்ளேன்

எனவே, போதைப்பொருளை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுப்பது மிகவும் நல்லது என தெரிவித்துள்ளார்.

Related posts

52 நாள் அரசாங்கத்தில் களவுபோன அரிசி தொடர்பிலேயே குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் விளக்கம் 

வீடியோ | சட்டம் போதாது என்றால், மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் உள்ளது – ஜனாதிபதி அநுர

editor

திலித் ஜயவீரவுக்கு அதிகரிக்கும் ஆதரவு

editor