உள்நாடு

முதலாம் தரத்துக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பிலான அறிவித்தல்

(UTV | கொழும்பு) –  2021ம் கல்வியாண்டுக்கான முதலாம் தரத்துக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பப்படிவங்களை கையளிப்பதற்காக வழங்கப்பட்ட காலம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 30 ஆம் திகதியுடன் குறித்த காலம் நிறைவடையவிருந்த நிலையில் தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு, முதலாம் தரத்துக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பப்படிவங்களை கையளிப்பதற்கான காலத்தை எதிர்வரும் ஜுலை மாதம் 31 ஆம் திகதி வரை நீடித்துள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

லொஹான் மற்றும் அவரது மனைவிக்கு விளக்கமறியல் நீடிப்பு

editor

ரயில் தடம்புரள்வு – கரையோர ரயில் சேவையில் தாமதம்

பொகவந்தலாவ மலைத்தொடரில் தீ பரவல்