உள்நாடு

முட்டை விலை இன்னும் குறைக்கப்படவில்லை – பேக்கரி உரிமையாளர்கள்

(UTV | கொழும்பு) – நுகர்வோர் விவகார அதிகார சபையினால் அமுல்படுத்தப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையில் பேக்கரி நடத்துனர்களால் முட்டைகளை பெற்றுக்கொள்ள முடியவில்லை என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

முட்டை ஒன்றின் விலையை 65 ரூபாவாக அதிகரிப்பது அநீதியானது என குறித்த சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

எனவே இவ்வாறான விலை உயர்வை தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை மற்றும் வர்த்தக அமைச்சரிடம் வலியுறுத்துவதாக அவர் கூறினார்.

முட்டைக்கு அதிகபட்ச சில்லறை விலையை விதிப்பதற்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை வெள்ளிக்கிழமை எடுத்த முடிவை அவர் பாராட்டினார்.

இருப்பினும், கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இரண்டு நாட்களாகியும், விலை திருத்தம் அமுல்படுத்தப்படவில்லை என்றார்.

முட்டை உற்பத்தியாளர்கள் வர்த்தமானி அறிவித்தலுக்கு இணங்குமாறும், பொதுமக்களுக்கும் ஏனைய வர்த்தகர்களுக்கும் சலுகைகளை வழங்குமாறும் ஜயவர்தன வலியுறுத்தியுள்ளார்.

Related posts

உயர்தரப் பரீட்சையை மேலும் ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கோரி மனு தாக்கல்!!

ரணிலுடன் சுமந்திரன்!

இன்றுமுதல் உயர்த்தப்பட்ட எரிபொருட்களின் விலை உயர்வு! (விபரம்)