உள்நாடு

முடக்கப்பட்ட பகுதிகள் மீளவும் முடக்கப்படும் சாத்தியம்

(UTV | கொழும்பு) –  தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டால், அவர்களால் பெருமளவானோருக்கு எச்சரிக்கை ஏற்படுமாயின் குறித்த பிரதேசங்களை மீண்டும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதேவேளை, மேல் மாகாணத்திலிருந்து மத்திய மலைநாட்டுக்குச் செல்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு விடுத்த அறிவித்தலை மீறி சிலர் அந்த பகுதிகளுக்குச் சென்றமையினாலேயே மத்திய மாகாணத்தில் வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளதாகவும் இராணுவத்தளபதி தெரிவித்தார்.

கொழும்பிலிருந்து மத்திய மலைநாட்டை அண்மித்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தோம். எனினும் அந்த அறிவித்தலை மீறிச் சென்ற நபர் ஒருவரால் மஸ்கெலியாவில் தொற்று பரவல் ஏற்பட்டது. இதே போன்று கொட்டாஞ்சேனையிலிருந்து சென்ற நபரொருவராலேயே நுவரெலியாவிலும் தொற்று இனங்காணப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

உதயசூரின் சின்னத்தில் உதயமான தமிழர் ஐக்கிய முன்னணி

கொழும்பில் 4074 மக்களை உடனடியாக குடியமர்த்துமாறு உத்தரவு!

என்னை பாராளுமன்றத்திற்கு அனுப்பிய எனது மக்களுக்கு நன்றி – அம்பிகா சாமுவேல்

editor