குற்றப் புலனாய்வுத் துறையுடன் (CID) தொடர்புடையதாகக் கூறிக்கொள்ளும் ஒரு சிலர், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தொடர்பாக விரிவான விசாரணைகளை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது கடந்த வெள்ளிக்கிழமை (12) கல்கிஸையில் உள்ள எம்.பி.யின் சகோதரியின் வீட்டிற்கு வந்த குழு, எம்.பி. பற்றி விசாரித்தது.
இது தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவிற்குப் பொறுப்பான சிரேஷ்ட டிஐஜி திரு. அசங்க கரவிட்டவிடம் திரு.ரகுமான் எழுத்துப்பூர்வமாக முறைப்பாடு செய்துள்ளார்.
‘சிம் கார்டு தொலைந்து போனது’ தொடர்பாக எம்.பி. அளித்த புகாரை விசாரிக்க சகோதரியின் வீட்டிற்கு வந்த குழு வந்ததாக ஆரம்பத்தில் கூறப்பட்டது.
இருப்பினும், பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், தான் ஒருபோதும் அப்படி ஒரு புகாரைச் செய்ததில்லை என குறிப்பிட்டுள்ளார்.
முஜிபுர் ரஹானுக்கு தொலைபேசி அழைப்பு எடுத்து தரவா என அவரது சகோதரியின் வீட்டுக்கு வந்தவர்களிடம் எம் பி யின் சகோதரி வினவியுள்ள போது அதற்கு அவர்கள் மறுப்பு வெளியிட்டுள்ளதாக கூறப்பட்டது.
இதே போன்ற சம்பவங்கள் இதற்கு முன்பும் பதிவாகியுள்ளதாக முஜிபுர் ரஹ்மான் எம் பி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் முன்னதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் வீட்டில் இல்லாத நேரத்தில் கொலன்னாவையில் உள்ள அவரது வீட்டிற்கு ஒரு குழு சென்று அவரது மனைவியிடம் தகவல் கேட்டுள்ளாதாகவும் அதற்கு, முந்தைய சந்தர்ப்பத்தில், சிஐடி அதிகாரிகள் என்று கூறிக்கொள்ளும் ஒரு குழு, பொரள்ளையில் உள்ள முஜிபுர் ரஜ்மானின் மனைவியின் தாயாரின் வீட்டிற்கும் சென்று பாராளுமன்ற உறுப்பினரைப் பற்றி விசாரித்தது.
இது வேண்டுமென்றே செய்யப்பட்ட செயலாக இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
“இதுபோன்ற மோசமான செயல்களால் என்னை மிரட்ட முடியாது” என்று பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கூறினார்.
