வகைப்படுத்தப்படாத

முச்சக்கர வண்டியில் இருந்து வெளியே பாய்ந்த மாணவி

(UDHAYAM, COLOMBO) – முச்சக்கர வண்டியில் இருந்த வெளியே பாய்ந்த 16 வயது பாடசாலை மாணவி காயமடைந்து அரநாயக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் அண்மையில் அரநாயக்க – திக்கபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

தனது 24 வயது காதலனுடன் முச்சக்கர வண்டியில் மேலதிக வகுப்பிற்கு சென்று கொண்டிருந்த போது இருவருக்கு இடையே ஏற்பட்ட முறுகல் காரணமாக அந்த மாணவி இவ்வாறு முச்சக்கர வண்டியில் இருந்த வெளியே பாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வீடு திரும்பியுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

Related posts

டெங்கு நோய்த் தாக்கம் அதிகரிப்பு

சீனாவில் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி 10 பேர் உயிரிழப்பு

ஆர்ஜென்டினா மற்றும் சவுதி அணிகளுக்கிடையிலான போட்டி ஆரம்பம்