உள்நாடு

முச்சக்கர வண்டிகளுக்கான மீட்டர் பொருத்தும் நடவடிக்கை ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) – இம்மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படவிருந்த முச்சக்கர வண்டிகளுக்கான மீட்டர் பொருத்தும் பணிகள் மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிரதேச செயலக மட்டத்தில் முச்சக்கர வண்டிகளுக்கான மீட்டர் சரிபார்க்க நடமாடும் டாக்சி சேவை மையங்களை அமைப்பதற்கும் அங்கீகரிக்கப்பட்ட டாக்சி மீட்டர்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதற்கும் அளவீட்டு அலகுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது.

அதன் ஆரம்ப கட்டம் மேல் மாகாணத்தில் இருந்து தொடங்குவதாக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கொழும்பில் 4074 மக்களை உடனடியாக குடியமர்த்துமாறு உத்தரவு!

யாழில் 60போலி சாரதி அனுமதிப்பத்திரம் : சிக்கிக்கொள்ளும் நபர்!

இன்றும் மழையுடனான காலநிலை