அரசியல்உள்நாடு

முக்கிய கலந்துரையாடல் – அவசரமாக கூடிய தமிழ்க் கட்சிகள்

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பான முக்கிய கலந்துரையாடல் ஒன்றில் தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகள் இன்று (15) ஈடுபட்டிருந்தன.

குறித்த தேர்தலில் தமிழ் கட்சிகள் ஒற்றுமையாக ஒன்றிணைந்து போட்டியிட்டு வடமாகாணத்தை எவ்வாறு கைப்பற்றுவது என்பது தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடிள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியில் இந்த சந்திப்பு இடம்பெற்ற நிலையில், குறித்த கலந்துரையாடலுக்கு வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜா பெருமாள் தலைமை தாங்கியிருந்தார்.

இன்று பிற்பகல் இடம்பெற்ற குறித்த சந்திப்பில், சுரேஷ் பிரேமசந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், முருகேசு சந்திரகுமார், வேந்தன் உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

குறிப்பாக அடுத்த வருடம் அளவில் வடமாகாண சபை தேர்தலை நடத்த எதிர்பார்ப்பதாக அரசாங்கம் கூறியுள்ள நிலையில் அது தொடர்பில் கட்சிகளின் நிலைப்பாடு எவ்வாறு காணப்படுகின்றது என்பது தொடர்பிலும் இந்த தேர்தலில் வெற்றி பெறுவது குறித்தும் தீர்க்கமாக ஆராயப்பட்டிருந்தன.

இந்த கூட்டத்திற்கு இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் M.A சுமந்திரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் அவர் இன்று குறித்த சந்திப்பிற்கு சமூகமளித்திருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

-பிரதீபன்

Related posts

வடக்கு , கிழக்கிலுள்ள மக்கள் காணிகளை விடுவிக்குமாறு முன்வைக்கும் கோரிக்கைகள் நியாயமானது – அமைச்சர் பவித்திரா

சகல முச்சக்கரவண்டிகளிலும் கட்டண அளவீட்டு கருவியை பொருத்துவது கட்டாயம்

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2014 ஆக உயர்வு