உள்நாடுவிசேட செய்திகள்

மீண்டும் புதிய உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை

உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 3,950 அமெரிக்க டொலரைத் தாண்டியுள்ளதாக சர்வதேச சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.

அதன்படி, கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது நாட்டில் தங்கத்தின் விலை 8,000 ரூபாய் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய (07) தங்க விற்பனை நிலவரப்படி,

22 கரட் பவுண் தங்கத்தின் விலை 290,500 ரூபாவாக அதிகரித்துள்ளது.

இது கடந்த வௌ்ளிக்கிழமை 283,000 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டிருந்தது.

இதற்கிடையில், கடந்த வாரம் 306,000 ரூபாவாக நிலவிய 24 கரட் பவுண் தங்கத்தின் விலை இன்று 314,000 ரூபாவாக உயர்ந்துள்ளது.

Related posts

தோல்வியில் ரணில்

ஜனாதிபதி ரணில் மூன்றாம் சார்லஸ் மன்னரை சந்தித்தார்

தென்கிழக்குப் பல்கலைக் கழக  பிரயோக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதியாக பேராசிரியர் நளீர்  

Dilshad