உள்நாடு

மீண்டும் பயணக் கட்டுப்பாடு தொடர்பிலான அறிவிப்பு

(UTV | கொழும்பு) – மக்கள் சுகாதார வழிக்காட்டல்களை பின்பற்றாது நடந்து கொள்ளும் விதத்திற்கு அமைய மீண்டும் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது குறித்து தீர்மானிக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இதனை தெரிவித்திருந்தார்.

மக்கள் கொரோனா தொற்று நோய் கட்டுப்பாட்டுக்கு வழங்கும் பங்களிப்பின் அடிப்படையில் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா இல்லையா என்பது தீர்மானிக்கப்படும்.

மக்கள் வழங்கும் ஒத்துழைப்புகளுக்கு அமைய நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த துரதிஷ்டவசமான நிலைமையை நாட்டில் இருந்து ஒழிக்க முடியும். உலகில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கை வைரஸ் கட்டுப்பாட்டில் சிறந்த நிலைமைக்கு வந்துள்ளது.

தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளை வெற்றிகரமாக நடந்துள்ளதால், மக்கள் சுகாதார வழிக்காட்டல்களுக்கு அமைய வாழ பழகிக்கொள்ள வேண்டும்.

தொற்று நோய் நிலைமையானது மிக நீண்டகாலத்திற்கு தொடர்ந்தால், அது பல பொருளாதார பிரச்சினைகளை உருவாக்கலாம். இதனால், பலம் துன்பங்களை அனுபவிக்க நேரிடும் எனவும் சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

வாகன இறக்குமதிக்கு பல பிரிவுகள் கீழ் அனுமதி வழங்கப்படும்

editor

உலகம் முழுவதும் Microsoft Teams சேவைகள் செயலிழப்பு

வடமத்திய மாகாண பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

editor