உள்நாடுவிளையாட்டு

மீண்டும் சமரி அத்தபத்து முதலிடத்தை பிடித்துள்ளார்

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் மகளிர் ஒருநாள் சர்வதேச துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணித்தலைவர் சமரி அத்தபத்து முதலிடத்தை பிடித்துள்ளார். அவர் 773 புள்ளிகளுடன் முதலிடத்தை பெற்றுள்ளார்

சர்வதேச கிரிக்கட் பேரவையின் நேற்றைய (22) புதுப்பிப்பின் படி, சாமரி அத்தபத்து 773 போனஸ் புள்ளிகளுடன் தரவரிசையில் முதலிடத்தை அடைந்தார்.

சமீபத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ஆட்டமிழக்காமல் 195 ஓட்டங்களை குவிப்பதற்கு முன்பு சமாரி துடுப்பாட்ட வரிசையில் இரண்டாவது இடத்தில் இருந்தார்.

அவர் இதுவரை 101 ஒருநாள் போட்டிகளில் 9 சதங்கள் மற்றும் 16 அரைசதங்களுடன் 3,513 ஓட்டங்களை குவித்துள்ளார்.

இங்கிலாந்து வீரர் நடாலி சீவர் 764 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், தென்னாப்பிரிக்க வீரர் லாரா வால்வார்ட் 718 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

 

Related posts

மத்திய கிழக்கில் தலைமறைவாகியுள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்கள் ஏழு பேர் சரணடைய இணக்கம் – அமைச்சர் ஆனந்த விஜேபால

editor

ஜனாதிபதி ரணில் 99 வீத வாக்குகளை பெறுவார் – வடிவேல் சுரேஷ்

editor

வீடியோ | இரட்டை நாக்கு கொண்ட அரசாங்கமாக இந்த அரசாங்கம் காணப்படுகின்றது – IMF யின் வெறும் வரவு செலவுத் திட்டமாகும் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor