சூடான செய்திகள் 1

மீண்டும் ஏவுகணை சோதனை : கொரிய தீபகற்பத்தில் பதற்றம்

(UTVNEWS | COLOMBO) -அமெரிக்காவுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் விடுத்து வரும் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனைகளை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் விதித்த பொருளாதார தடைகளை மீறியும், உலக நாடுகளின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் வட கொரியா தொடர்ந்து அணு ஆயுதங்களையும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் சோதித்து வருகிறது.

இந்த சூழலில் கடந்த மாத இறுதியில் தென்கொரியா சென்றிருந்த டிரம்பை, யாரும் எதிர்பாராத வகையில் கொரிய எல்லையில் வட கொரியா தலைவர் கிம் ஜாங் அன் சந்தித்தார்.

அப்போது அணுஆயுத விவகாரம் தொடர்பான இருதரப்பு பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவது என முடிவு செய்யப்பட்டது. இந்த பேச்சுவார்த்தை 2 வாரங்களில் தொடங்கும் என அமெரிக்கா கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது.

இந்த நிலையில், வடகொரியா நேற்று ஒரே நாளில் 2 குறுகிய தூர ஏவுகணைகளை சோதித்து பார்த்ததாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.

இதனால் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.

Related posts

இன்னும் சற்று நேரத்தில் எதிர்ப்பு பேரணி; கொழும்பை நோக்கி

உள்ளூராட்சிமன்ற தேர்தல் வேட்பாளர்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளருடன் கலந்துரையாடல் – பிரசன்ன ரணதுங்க

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு எதிராக மக்கள் சக்தி வாக்களிக்கும்