உள்நாடு

மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் டி.வி. சாந்த சில்வா தெரிவிக்கையில், பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து ஆர்டர் செய்யப்பட்ட எரிபொருள் இருப்புக்களை வழங்காமையே இதற்கு காரணம் எனத் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் பவுசர் உரிமையாளர்களின் பணிப்புறக்கணிப்பு திங்கட்கிழமை பிற்பகல் நிறைவடைந்த போதிலும், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தொடர்ந்தும் எரிபொருள் நிரப்ப முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Related posts

கொரோனா வைரஸூக்கு சிகிச்சையளித்த 15 தாதியர்கள் வெளியேற்றம்

கோப் குழுவின் தலைவரானார் நிஷாந்த சமரவீர 

editor

தற்காப்புக்காக வழங்கப்பட்டுள்ள துப்பாக்கிகளை கையளிக்குமாறு அறிவிப்பு

editor