விளையாட்டு

மீண்டும் ஆட்டத்தில் களமிறங்கும் ரஸல்…

(UTV|WEST INDIES) இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி இரண்டு ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டிகளுக்கான மேற்கிந்திய தீவுகள் அணியில், சகல துறை ஆட்டக்காரர் அந்த்ரே ரஸல் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

முழங்காலில் ஏற்பட்டிருந்த காயம் காரணமாக அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

எனினும் காயம் முழுமையாக குணமடையாமை காரணமாக, அவர் பந்து வீச்சில் ஈடுபட மாட்டார் எனவும், துடுப்பாட்டத்தில் மாத்திரமே ஈடுபடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும், 2வது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியும் வெற்றி பெற்றுள்ளது.

Related posts

தெற்காசிய செஸ்ட்போல் போட்டியில் முதலாம், இரண்டாம் இடத்தை வென்ற அணியினருக்கு ஆளுநர் வாழ்த்து தெரிவிப்பு!

editor

தலைக்கனமான இந்திய வீரர்கள்-விளாசிய இங்கிலாந்து முன்னாள் வீரர்

ஆசிய கிண்ணம் 2022 : இலங்கை – இந்தியா இன்று களமிறங்குகிறது