உள்நாடு

மீண்டும் அதிகரிக்கப்படும் யூரியாவின் விலை!

(UTV | கொழும்பு) –

உலக சந்தையில் யூரியா உரத்தின் விலை அதிகரித்துள்ள போதிலும், இந்த நாட்டில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் யூரியா உரத்தின் விலையை அதிகரிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ரஷ்யா, உக்ரைன், பலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையில் இடம்பெற்று வரும் மோதல்களினால் யூரியா உள்ளிட்ட இரசாயன உரங்களின் விலை அதிகரிக்கக் கூடும் எனினும் இந்நாட்டு விவசாயிகளை சுமக்க இடமளிக்கப்பட மாட்டாது என விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்பட்ட 21,000 மெற்றிக் தொன் யூரியா உரம் இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், அதிக அளவு யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்கு விலை கோரப்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.யூரியா உரத்தின் விலை உயர்வடைந்த போதிலும், அரசாங்கத்திற்கு சொந்தமான உர நிறுவனங்களுக்கு சொந்தமான உரங்கள் அதே விலையில் வழங்கப்படும் எனவும், புதிதாக கொள்வனவு செய்யப்படும் யூரியா உரம் 9000 ரூபாவிற்கு அதே விலையில் வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தொற்று நோய்தடுப்பு பிரிவுக்கு GMOA அழைப்பு

நாடளாவிய ரீதியில் இரவு 11 மணி முதல் பயணக் கட்டுப்பாடு

பல்கலைக்கழக மாணவர் மரணம் – மேலும் நான்கு மாணவர்கள் பொலிஸில் சரண்

editor