உள்நாடு

மீட்பு பணிகள் இடம்பெறும் பகுதிகளில் ட்ரோன்களை பறக்கவிட வேண்டாம் – விமானப்படை

மீட்பு பணிகள் இடம்பெறும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ட்ரோன்களை பறக்கவிடுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு இலங்கை விமானப்படை அறிவுறுத்தியுள்ளது.

உரிய அனுமதிகள் இன்றிப் பறக்கவிடப்படும் ட்ரோன்கள் அத்தியாவசியமான மீட்புப் பணிகளுக்கான விமானப் பயணங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் விமானப்படை எச்சரித்துள்ளது.

அத்துடன், அனைத்து ட்ரோன் புறப்பாடுகள் மற்றும் தரையிறக்கங்கள் பற்றிய தகவல்களை 0112343970, 0112343971 அல்லது 115 அவசர இலக்கத்தின் மூலம் முன்கூட்டியே அறிவிக்குமாறும் இலங்கை விமானப்படை கேட்டுக்கொண்டுள்ளது.

Related posts

பாடசாலை மாணவர்களுக்கு பருவச் சீட்டுகள் இரத்து!

MT New Diamond கப்பலின் தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள்

கால்வாயில் கவிழ்ந்து கார் விபத்து – இருவர் பலி

editor