சூடான செய்திகள் 1வணிகம்

மிளகு இறக்குமதி நிறுத்தம்

(UTV|COLOMBO)-மிளகு இறக்குமதி நடவடிக்கைகள், உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளன.

தம்புள்ளையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட விவசாய அமைச்சர் பி.ஹரிசன் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மிளகு செய்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில், மிளகு இறக்குமதியை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, உழுந்து செய்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், இறக்குமதி செய்யப்படும் உழுந்து ஒரு கிலோகிராமுக்கு 200 ரூபா வரியை அறவிடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் இங்கு தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

மாணவர்கள் சிலரை தாக்கிய சம்பவம்-பல்கலை மாணவர்கள் 13 பேர் கைது

இனவாத மதகுருமாரின் செயற்பாடுகளை அரசு கண்டும் காணததுபோல் இன்னும் மெளனம் காப்பது ஏன்??? கிண்ணியாவில் அமைச்சர் றிஷாட் கேள்வி.

புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி முன்னிலையில் நியமிப்பு